×

கொடைக்கானலில் யானை நடமாட்டம்: மோயர் சதுக்கம், தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடல்


கொடைக்கானல்: கொடைக்கானலில் மோயர் சதுக்கம் பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதால் அதனை விரட்டும் வரையில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. கொடைக்கானல் பகுதியில் தொடர்ந்து காட்டுயானை மற்றும் காட்டு எருமைகளால் பல்வேறு இன்னல்களை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலமாக இருக்கக்கூடிய மோயர் சதுக்கம், பயன்மரக்காடுகள், குணாகுகை தூண்பாறை உள்ளிட்ட 12 சுற்றுலாத்தலங்கள் இன்று மூடப்படுகிறது. மோயர் சதுக்கம் பகுதிகளில் யானைகள், யானைக்கூட்டங்கள் அதிகளவில் நடந்து வருவதால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பேரிஜம் பகுதியில் இருந்த யானைக்கூட்டங்கள் தற்போது இடம் பெயர்ந்து மோயர் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது. இதனால் கடந்த 7 நாட்களாக பேரிஜம் எரியும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பகுதி யானைகள் நடமாட்டத்தால் மூடப்பட்டிருப்பது சுற்றுலாப்பயணிகளுக்கிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யானைகளை விரட்டும் வரையில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட வனஅலுவலர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பகுதியில் இருக்கக்கூடிய கடைகள் யானைகளால் சேதப்படுத்தபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானலில் யானை நடமாட்டம்: மோயர் சதுக்கம், தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Elephant Movement ,Kodaikanal ,Moir Square ,Thoonparai ,Dinakaran ,
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...