
- கர்நாடக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காவிரி
- அமைச்சர் துரைமுருகன்
- தில்லி
- வளங்கள்
- அமைச்சர்
- Duraimurugan
- காவிரி. ...
டெல்லி: கர்நாடகாவிடம் தண்ணீர் இருக்கிறது, ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் தர மறுக்கிறது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். பின்னர், டெல்லியில் ஒன்றிய அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;
கர்நாடகாவிடம் தண்ணீர் இருக்கிறது, ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் தர மறுக்கிறது. ஆங்காங்கே சிறு, சிறு அணைகளை கட்டி கே.ஆர்.அணை நீர் தேக்கி வைத்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு கர்நாடகா வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து ஒன்றிய அமைச்சரிடம் விளக்கியுள்ளோம். தமிழ்நாட்டுக்கு நீர்திறக்குமாறு கர்நாடகாவை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம். கர்நாடகாவுக்கு தண்ணீர் தரும் எண்ணம் இல்லை. நெருக்கடியான நேரத்தில் நீர்பகிர்வை எப்படி தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி காவிரி நீரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
The post கர்நாடகாவிடம் தண்ணீர் இருக்கிறது, ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் தர மறுக்கிறது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.