×

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (15) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகர் விஜய் ஆண்டனியின் 12-ம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவேரி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கூறியதாவது; இறந்த சிறுமி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் ஆவார். மேற்படி இறந்த சிறுமி, சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததாகவும், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு போலீசார் சென்றுள்ளனர்.

 

The post இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை! appeared first on Dinakaran.

Tags : Vijay Andany ,Chennai ,Mira ,Vijay Antony ,Chennai Church Park School ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...