×

சரியாக வேக வைக்காத ஜிலேபி மீன் சாப்பிட்டதால் கை, கால்களை இழந்த பெண்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்ஜோசை சேர்ந்தவர் லாரா பராஜாஸ்(40). இவர் சில மாதங்களுககு முன் உள்ளூர் மார்கெட்டில் ஜிலேபி மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் நிலை சரியாகவில்லை. மருத்துவ பரிசோதனையில், அவர் சாப்பிட்ட ஜிலேபி மீனில் வைப்பிரியோ வல்னிபிகஸ் என்ற பயங்கரமான பாக்டீரியா தொற்று இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மீனை அவர் சரியாக வேக வைக்காத காரணத்தால் அந்த பாக்டீரியா, லாராவின் ரத்த ஓட்டத்தில் கலந்து உள்ளது.

இந்த பாக்டீரியாவால், லாராவின் கை விரல்கள், உதடு, பாதங்கள் அழுகி கருத்துபோனது. உடல் முழுவதும் பாக்டீரியா தொற்று பரவியதால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. அவரை டாக்டர்கள் மருந்து கொடுத்து கோமா நிலைக்கு கொண்டு சென்று, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை, லாராவின் இரு கைகள், கால் பாதங்கள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. அவரது உயிரை காக்க வேறு வழியில்லாததால் கை, கால்கள் துண்டிக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

The post சரியாக வேக வைக்காத ஜிலேபி மீன் சாப்பிட்டதால் கை, கால்களை இழந்த பெண் appeared first on Dinakaran.

Tags : California ,Laura Parajas ,Sanjosai, California Province, United States ,Market ,Jilepi ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கோலின்ஸ்