×

கோழிக்கோட்டில் நிபா பரவல் எதிரொலி பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் காய்ச்சல் பரவலைத் தொடர்ந்து கோழிக்கோட்டில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி 2 பேர் மரணமடைந்தனர். இந்த நோய் பாதித்த 4 பேர் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மட்டும் நோய் அறிகுறிகளுடன் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தவிர நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர். இந்தநிலையில் நிபா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் 23ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மூட கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் கீதா உத்தரவிட்டு உள்ளார். தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முதல் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது.

The post கோழிக்கோட்டில் நிபா பரவல் எதிரொலி பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kozhikotte ,Thiruvananthapuram ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?