×

இலங்கை தமிழ் எம்பியை தாக்கிய 6 பேர் சிறையில் அடைப்பு

கொழும்பு: திலீபன் நினைவு தின பேரணியில் தமிழ் தேசிய முன்னணி எம்பி மீது நடத்திய தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் தலைவரான திலீபன் கடந்த 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார். அவரது நினைவாக ஆண்டுதோறும் வாகன பேரணி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இலங்கையின் திரிகோணமலை மாவட்டம் கப்பல்துறையில் நேற்றுமுன்தினம் திலீபன் நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி வாகன பேரணி நடைபெற்றது. இதில் தமிழ்தேசிய முன்னணி எம்பி செல்வராஜா கஜேந்திரன் கலந்து கொண்டார். 14 பேர் கொண்ட சிங்களர்கள் அடங்கிய கும்பல் செல்வராஜாவை தாக்கியது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இதை வேடிக்கை பார்த்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசிய முன்னணியினர் போலீசில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து 2 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post இலங்கை தமிழ் எம்பியை தாக்கிய 6 பேர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Colombo ,Tamil National Front MP ,Tilipan Memorial Day ,Dinakaran ,
× RELATED துவாரகா வீடியோ மீது நம்பகத்தன்மை...