
பாட்னா: மக்களவை தேர்தலை ஒன்றிய பாஜ அரசு முன்கூட்டியே நடத்தினாலும் அதனை சந்திக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். வரும் மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்துவதை ஒன்றே குறிக்கோளாக கொண்டு எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்து அதனை வலுப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பாட்னாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் நிதிஷ் குமார், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒன்றியத்தில் மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளது. அவர்கள் முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் நடத்தட்டும். நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். எங்களது அரசு சாலை அமைத்தல், பாலம் கட்டுதல், மின்சாரம், குடிநீர் உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. தேர்தலில் மக்கள் இறுதி முடிவு எடுப்பார்கள்,” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் தேஜஸ்வி, “நாங்கள் ஒற்றுமையாக இருந்து தேர்தலை எதிர்கொள்வோம். தற்போது ஒன்றிய அரசினால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்களுக்கு மத்தியில் ஏற்படும் ஆட்சி மாற்றம் சுதந்திரம் அளிக்கும் என்று தெரிவித்தார்.
The post முன்கூட்டியே தேர்தல் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்: நிதிஷ் குமார் பேட்டி appeared first on Dinakaran.