
புதுடெல்லி: ஒன்றிய நிதியமமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தாண்டு செப். 16ம் தேதி வரையிலான நேரடி வரி வசூல் ரூ.8,65,117 கோடி. இதில், கார்ப்பரேட் வருமான வரி ரூ.4,16,217 கோடி, தனிநபர் வருமான வரி (பங்கு பரிவர்த்தனை வரி உள்பட) ரூ. 4,47,291 கோடி ஆகும். செப்டம்பர் 16 வரையிலான நிகர நேரடி வரி வசூலானது 23.51 சதவீதம் உயர்ந்துள்ளது. செப்டம்பர் மத்தி வரையிலான முன்கூட்டிய வரி (அட்வான்ஸ் டேக்ஸ்) வசூல் ரூ.3.55 லட்சம் கோடி என்பது 21 சதவீதம் வளர்ச்சி. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.2.94 லட்சம் கோடியாக இருந்தது. முன் கூட்டிய வரியில் வசூலான ரூ.3.55 லட்சம் கோடியில் ரூ.2.80 லட்சம் கோடி கார்ப்பரேட் வரி, ரூ.74,858 கோடி தனிநபர் வருமான வரி மூலம் கிடைத்துள்ளது.
The post செப்டம்பர் 16 வரை நேரடி வரி ரூ.8.65 லட்சம் கோடியாக உயர்வு appeared first on Dinakaran.