×

காஷ்மீரில் தீவிரவாதிகள் வேட்டை 6வது நாளாக நீடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகளை தேடும் வேட்டை நேற்று 6வது நாளாக நீடித்தது. ஜம்மு காஷ்மீர், அனந்தநாக் மாவட்டம் கடோலி பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கடந்த 13ம் தேதி பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். பாதுகாப்பு படையினருடன் போலீசாரும் தீவிரவாதிகள் இருந்த இடத்தை நோக்கி சென்றனர். அப்போது, தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 ராணுவ அதிகாரிகள்,ஒரு டிஸ்பி ஆகியோர் வீரமரணமடைந்தனர். 2 வீரர்கள் படுகாயமமுற்றனர். ஒரு வீரரை காணவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மேலும் பல வீரர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், வன பகுதியில் பதுங்கு குழிகளில் மறைந்து இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதால் அவர்களை வேட்டையாடுவதில் பாதுகாப்பு படையினருக்கு கடும் சவாலாக உள்ளது. தீவிரவாதிகளின் மறைவிடத்தை நோக்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தீவிரவாதிகளை தேடும் வேட்டை நேற்றுடன் 6வது நாளை எட்டியது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் பலியான ஒரு தீவிரவாதியின் உடல் கிடப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்த உறுதியான தகவல் இல்லை.

* ‘ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழிவாங்குவோம்’
இதற்கிடையே நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜம்மு- காஷ்மீர் ஆளுனர் மனோஜ் சின்கா, ‘‘ அனந்தநாக் சம்பவத்தில் வீர தியாகிகள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழி வாங்குவோம். தீவிரவாதிகளை வழிநடத்தி சென்றவர்கள் கடும் விலை கொடுக்க வேண்டி வரும். ஒட்டுமொத்த நாடும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்கிறது’’ என்றார்.

The post காஷ்மீரில் தீவிரவாதிகள் வேட்டை 6வது நாளாக நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Srinagar ,Jammu and ,Jammu and Kashmir ,Anantnag district ,Gadoli ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்பு காஷ்மீரை...