×

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவு கப்பல் தென்னிந்தியாவுக்கான ஆபத்தை தடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள ஷி யான் 6 என்ற உளவு கப்பல் அடுத்த மாதம் இலங்கையில் உள்ள கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வரவுள்ளது. சீன உளவு கப்பலின் ஆராய்ச்சி என்பது தென் மாநிலங்களை உளவு பார்ப்பதுதான் என்பதால், இது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனா தொடர்பான சிக்கல்களை பொறுத்தவரை இலங்கை அரசு இரட்டை வேடம் போடுகிறது. இலங்கை அரசுடனான நமது பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் திருத்தங்களை செய்ய வேண்டும். கொழும்பு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதை ஏற்க இலங்கை அரசு மறுத்தால் அந்நாட்டிற்கு மிகக்கடுமையான பாடத்தை ஒன்றிய அரசு புகட்ட வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

The post இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவு கப்பல் தென்னிந்தியாவுக்கான ஆபத்தை தடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,South India ,Ramadoss ,Union Govt. ,CHENNAI ,BAMA ,China ,Union Government ,Dinakaran ,
× RELATED போலி பாஸ்போர்ட் : திபெத் நாட்டைச் சேர்ந்தவர் கைது!!