×

நீங்கள் ஒன்றும் பெரிய தலைவர் கிடையாது நோட்டா, கோட்டா என்று பேசுவதை முதலில் நிறுத்துங்கள்: ஜெயக்குமாருக்கு, பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் கண்டிப்பு

சென்னை: பாஜவை பார்த்து நோட்டா, கோட்டா என்று பேசுவதை முதலில் நிறுத்துங்கள் என்று ஜெயக்குமாருக்கு, பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். பாஜ கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு ஒவ்வொரு தொண்டனும் சந்தோஷப்படுகிறான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எந்த கூட்டத்தில் எது பேசினாலும், யார் பேசினாலும் கை தட்டுவார்கள். ஜெயக்குமார் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை. இந்த கூட்டணி தர்மம் என்பது இருவழி பாதை தான். ஒரு வழிபாதை அல்ல. ஒருத்தர் நினைக்கிறது தான் பேச வேண்டும். ஒருத்தர் நினைக்கிறதை தான் செய்ய வேண்டும் என்று யார் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

அதிமுகவின் கொள்கைக்கும், பாஜவின் கொள்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஒவ்வொருவரின் சிந்தாந்தங்கள் வேறு. ஜெயக்குமார் கூறியதை எடப்பாடி கூறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எங்கள் தலைவரை மட்டும் தனிமைப்படுத்தி பேசுவது, அவர் அப்படி பேசினார், இப்படி பேசினார். கூட்டணிக்கு எதிராக இருக்கிறார். டெல்லி சொல்லி தான் பேசுகிறார் என்று ஒரு கற்பனையான விஷங்களை பேசுவது தவறு. தனிப்பட்ட முறையில் எந்த தலைவர் பற்றியும் குறை சொல்லியோ, அவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்தவிதத்திலும் அண்ணாமலை பேசவில்லை.

முதலில் நோட்டா, கோட்டா என்று பேசுவதை அதிமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெயக்குமார் இருக்கும் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 14 வார்டுகளில் அதிமுக 3வது இடம், பாஜ 2வது இடம் பெற்றிருக்கிறது என்பது ஜெயக்குமாருக்கு தெரியும். தெரிந்தும் கூட, மக்களிடையே இந்த கூட்டணிக்கு இருக்கும் செல்வாக்கை கெடுக்கும் வேலையில் ஈடுபடக்கூடாது. என்ன செய்தாலும், எந்த சூழ்நிலையிலும், தமிழக பாஜ தயாராக தான் இருக்கும். எனவே, அண்ணாமலையை பற்றி விமர்சிப்பதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்.

* ‘மெயின் ரோட்டு அம்மா சொன்னாங்களா..’
பாஜ மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கட்சி மேலிடம் சொல்லித்தான் தலைவர் அண்ணாமலை பேசுகிறார் என்றால், ஜெயக்குமாரே, நீங்கள் யார் சொல்லி பேசுகிறீர்கள். மெயின் ரோட்டுக்கு வந்துடும்மான்னு சொல்வீங்களே, அந்தம்மா சொன்னாங்களா?. வளைந்து, குனிந்து டேபிள் சேருக்குள் புகுந்துச் சென்று, முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா? அப்படி யாரிடமும் குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு பதவிக்கு வராதவர் எங்கள் தலைவர் அண்ணாமலை. அது தான் எங்கள் தலைவருக்கான பெருமைமிகு தகுதி.

The post நீங்கள் ஒன்றும் பெரிய தலைவர் கிடையாது நோட்டா, கோட்டா என்று பேசுவதை முதலில் நிறுத்துங்கள்: ஜெயக்குமாருக்கு, பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Jayakumar ,BJP ,Vice President ,Karu Nagarajan ,CHENNAI ,Karu.Nagarajan ,
× RELATED இன்னும் மூன்று மாதங்களில் அதிமுக...