×

சாட்டை துரைமுருகன் ரூ.50 ஆயிரம் கொடுத்தார்: நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ பேட்டி

சென்னை: மானநஷ்ட வழக்கு போடுங்கள் மொத்தமாக எல்லாத்தையும் எடுத்து வந்து நிரூபித்துக் காட்டுகிறேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி பதில் அளித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். வீரலட்சுமி இடத்தில் இருந்து வெளியில் போக சொல்லி சாப்பாட்டையெல்லாம் நிறுத்தி பயங்கரமான தொந்தரவு கொடுத்தார்கள். அப்போது காவல் துறைக்கு உடனடியாக தெரியப்படுத்தினேன். ஆனால் அவர்கள் யாரும் எங்களை அங்கிருந்து மாற்றுவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு 5 மணி வரைக்கும் தான் நேரம் இருந்தது.

இந்நிலையில் விடியற்காலை 3 மணியளவில் சாட்டை துரைமுருகனுக்கு போன் பண்ணி இந்த இடத்தில் எங்களை போட்டு சாவடிக்கிறார்கள் என்று கூறினேன். அப்போது சாட்டை துரைமுருகன் தான் வக்கீல் பாலசுப்பிரமணியன் என்பவரை அனுப்பி வைத்தார். ஆனாலும் அவர்கள் 8 மணிக்கு தான் வந்தார்கள். அவர்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டனர். அவர்களிடம் இரண்டு நாட்கள் தங்கி சில வேலைகளை முடித்து விட்டு போகலாமா என்றேன். அதற்கு அவர்கள் இல்லை நீங்கள் இரவே வந்து வழக்கை வாபஸ் வாங்கிட்டு உடனே உங்களுடைய அக்காவை கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டும் என்று கூறினார்கள். என்னுடைய வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் போட்டுவிட்டு என்னை அனுப்பி வைத்தனர்.

சீமான் கிட்ட கேட்கிறேன், வெளியில் வந்து நின்னுட்டு ஒண்ணுமே பண்ணாதாது போல் பேசிட்டு இருக்கிறீர்கள், சாட்டை துரைமுருகன் போனை எடுத்து அவருக்கு வந்த அழைப்புகளை பார்த்தால் என்னிடம் தொடர்ந்து பேசியது தெரியும். நானே குறுஞ்செய்தி எல்லாத்தையும் காட்டிக் கொண்டு இருக்கிறேன். யார் என்ன ஆட்டம் ஆடுகிறார்கள். மானநஷ்ட வழக்கு போடுங்கள் மொத்தமாக எல்லாத்தையும் எடுத்து வந்து நிரூபித்துக் காட்டுகிறேன். பாலியல் விஷயத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரூப்பிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் மற்ற விஷயம் எல்லாம் உண்மை தானே. மதுரைக்கு 4, 5 முறை ஏன் அழைத்து செல்லப்பட்டேன் என்று விசாரணை செய்யவே இல்லை. போலீசார் எங்கள் சார்பாக எதுவும் பேசவில்லை. போலீசாருக்கு சீமான் அச்சுறுத்தல் விடுகிறார். எங்களை அனுப்பி வைத்ததே சாட்டை முருகன் தான், எனக்கு வந்த அழைப்புகளை போலீசார் எடுக்க சொல்லுங்கள். இவ்வாறு நடிகை விஜயலட்சுமி வீடியோவில் கூறியுள்ளார்.

The post சாட்டை துரைமுருகன் ரூ.50 ஆயிரம் கொடுத்தார்: நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Duraimurugan ,Vijayalakshmi ,Chennai ,Naam Tamilar Party ,
× RELATED மணல் குவாரிகளில் கொள்ளை நடக்கவில்லை...