×

மெக்சிகோ ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் லெய்லா

குவாதலஜாரா: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் தகுதி பெற்றார். முதல் சுற்றில் அமெரிக்காவின் அசியா முகமதுவுடன் மோதிய லெய்லா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். மற்றொரு முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை ஆன் லியை வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் யூஜெனி பவுச்சார்டு (கனடா), டெய்லர் டவுன்செண்ட் (அமெரிக்கா), அன்ஹெலினா கலினினா (உக்ரைன்), கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

The post மெக்சிகோ ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் லெய்லா appeared first on Dinakaran.

Tags : Mexico Open Tennis ,Leila ,Guadalajara ,Canada ,Leila Fernandez ,Women's Singles ,Mexico Open Tennis Series ,Dinakaran ,
× RELATED மெக்சிகோ ஓபன் டென்னிஸ்; சாக்கரி சாம்பியன்