×

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு திறனறித் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகு்ப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான திறனறித் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு 27ம் தேதி வரை நடக்கும். தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 30 லட்சம் மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டிலும் காலாண்டு அடிப்படையில் திறனறித் தேர்வுகள் நடத்துவது வழக்கம்.

இந்ததேர்வில் இ டம் பெறும் கேள்வித்தாள்கள் மூலம் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர் ஆண்டுப் பொதுத் தேர்வை எளிதில் எழுதும் வகையில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
மாணவ மாணவியரின் கற்றல் அடைவுத் திறனை சோதிக்கும் வகையில் அடைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இதன்படி இன்று முதல் 27ம் தேதி வரையில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடம், விருப்ப மொழிப்பாடம், ஆங்கிலம், உடற்கல்வியியல், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தேர்வுகள் நடக்க இருக்கிறது.

தேர்வுக்கான கேள்வித்தாள்கள் அனைத்தும் இணைய தளத்தில் இருந்து அந்தந்த பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிக்கும் தனித் தனியாக குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய வேண்டும், வேறு பள்ளியின் குறியீட்டு எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்றல் விளைவு மற்றும் திறன்வழி மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாநில மதிப்பீட்டுப் புலம் உருவாக்கப்பட்டு மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டன.

The post 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு திறனறித் தேர்வு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...