×

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் சாகசம்; யூடியூபர் வாசன் படுகாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட யூடியூபர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன், ஊர்ஊராக டு-வீலரில் பயணம் செய்து, தன்னுடைய அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரது யூடியூப் சானலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு தாமல் பகுதியில் வாசன் பைக்கில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

புகாரின்பேரில் வாசன்மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் சென்னை அமைந்தகரையில் வாசன் சென்ற கார், டு-வீலர்மீது மோதி விபத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

The post காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் சாகசம்; யூடியூபர் வாசன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : National Highway ,Kanchipuram ,Vasan Badugayam ,Chennai-Bangalore ,highway ,Vasan Padukayam ,
× RELATED தருமபுரி அருகே தனியார் சொகுசு...