
சென்னை: மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணபித்து நிராகரிக்கப்பட்டோருக்கு நாளை முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும். விண்ணப்பம் நிராகரிப்பு, மீண்டும் விண்ணப்பபதிவு உள்ளிட்டவை குறித்து உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று மீண்டும் விண்ணப்பிக்கலாம். தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இ-சேவை மூலம் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணபித்து நிராகரிக்கப்பட்டோருக்கு நாளை முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும் எனவும் ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குக்கு தொகை வராமல் இருப்பது உள்ளிட்ட சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நாளை முதல் உதவி மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இன்று முதல் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பின்பற்றி பொதுமக்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
The post மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணபித்து நிராகரிக்கப்பட்டோருக்கு நாளை முதல் உதவி மையம் செயல்படும் appeared first on Dinakaran.