×

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 74,000 போலீசார்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கபட உள்ளது என டிஜிபி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

முழு முதல் கடவுளான விநாயகர் பிறந்த நாளான இன்று விநாயகர் சதுர்த்தி என்று மக்கள் கொண்டாடி வருகின்றனர். அறிவு ,ஞானம், கல்வி ஆகியவற்றை கடவுளாகவும் எந்த விஷயத்தை முதலில் எடுத்தாலும், விநாயகரை வணங்கி தான் செய்ய வேண்டும் என்ற ஐதீகமும் இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை ஆங்காங்கே வைத்து மூன்று நாட்கள் கழித்து ஊர்வலமாக கொண்டு சென்று நதிகளில் கரைப்பது வழக்கம் ஆகும்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் 74,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாகவும், முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக டிரோன்கள் மற்றும் மொபைல் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 74,000 போலீசார் appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturdhi ,Tamil Nadu ,Chennai ,Vinayakar Chadurdhi ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...