×

செப். 28ம் தேதி மிலாது நபி பண்டிகை அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு

சென்னை: மிலாது நபி பண்டிகை வரும் 28ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மீலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு மீலாது நபி பண்டிகை செப்டம்பர் மாதம் 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.

The post செப். 28ம் தேதி மிலாது நபி பண்டிகை அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Govt ,Haji ,Milalam Prophet ,Chennai ,Tamil Nadu government ,Prophet Milalu ,Milalla Prophet Festive ,Government ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...