×

சில்லி பாயிண்ட்ஸ்

* 21 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார் சிராஜ். ஆசிய கோப்பையில் இது 2வது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. முன்னதாக, 2018 பைனலில் இந்திய அணிக்கு எதிராக 16 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்திய இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் முதலிடம் வகிக்கிறார்.

* இலங்கை அணி 50 ரன்னில் சுருண்டது, ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. முன்னதாக, 2000 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இலங்கையுடன் மோதிய இந்தியா 54 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது.

* இலங்கைக்கு எதிராக 263 பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி பெற்ற வெற்றி, இந்த வகையில் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் மிகப் பெரிய வெற்றியாக மட்டுமல்லாது, இலங்கைக்கு எதிராக ஒரு அணி பெற்ற மிகப் பெரிய வெற்றியாகவும் அமைந்தது.

* சிராஜ் 5 விக்கெட் கைப்பற்ற வெறும் 16 பந்துகளே தேவைப்பட்டன. 2003 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை வேகம் சமிந்தா வாஸ் 16 பந்தில் 5 விக்கெட் வீழ்த்தி படைத்த சாதனையை சிராஜ் நேற்று சமன் செய்தார்.

The post சில்லி பாயிண்ட்ஸ் appeared first on Dinakaran.

Tags : Siraj ,Asia Cup ,Dinakaran ,
× RELATED சில்லிபாயின்ட்…