×

சாலை விரிவாக்கப்பணியால் மழைநீர் செல்ல இடமில்லாமல் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது-நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பேராவூரணி : பேராவூரணியில் சாலை விரிவாக்கப்பணிகாக போடப்பட்ட மண், ஜல்லியால் மழைநீர் செல்ல இடமில்லாமல் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை நடவடிக்க எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணி நகரின் நடுவில் கல்லணை கால்வாயின் கிளை வாய்க்காலான, ஆனந்தவள்ளி பாசன வாய்க்கால் ஓடுகிறது, இதிலிருந்து, பழைய பேருந்து நிலையம் அருகில், இடதுபுறமாக கிளை வாய்க்கால் சென்று தாசில்தார் அலுவலகம், அரசுக்கருவூலம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வழியாக சென்று, ட்டாணிக்கோட்டையின் சில பகுதிகளில் பாசனத்திற்கு பயன்பட்டு, பின்னர் பூக்கொல்லை ரோட்டில் உள்ள பூனைகுத்தி காட்டாற்றில் வாய்க்கால் தண்ணீர் கலக்கும்.இதேபோல் பேராவூரணி கே.கே.நகர், பாந்தக்குளம் பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிந்து, இந்த பாசன வாய்க்கால் வழியாக சென்று காட்டாற்றில் கலக்கும். தற்போது பேராவூரணியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் இந்த பணிக்காக சேது சாலையில், பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் விஏஓ அலுவலகத்தோடு, வடிகால் வாய்க்கால் ஜல்லி மணல் கொண்டு மூடப்பட்டுள்ளது.இதன் கீழே குழாய் பதிக்காமல் வாய்க்காலை முற்றிலுமாக நெடுஞ்சாலைத்துறையினர் அடைத்து விட்டதால் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு அடுத்து உள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.தற்போது கடந்த நவம்பர் 2ம் தேதி மற்றும் இரண்டு தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக, இந்த வாய்க்கால் தொடர்ந்து செல்ல வழியில்லாததால் தண்ணீர் எதிர் திசையில், அண்ணா நகர் குடியிருப்பு, பாந்தக்குளம் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின. நெடுஞ்சாலைத்துறை அலட்சியம் காரணமாக பாசன வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் முழுமைப்படுத்தப்படாமல், பாதியோடு தூர்க்கப்பட்டு, துண்டிக்கப்பட்டு விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் இந்துமதி கூறியுள்ளார்….

The post சாலை விரிவாக்கப்பணியால் மழைநீர் செல்ல இடமில்லாமல் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது-நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Piraoorani ,Jalli ,Dinakaran ,
× RELATED நடுவழியில் பழுதாகி நின்ற ஜல்லி பேக்கிக் ரயில் பெட்டி