×

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை வென்றது தெ.ஆப்ரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் 122 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்கா 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச… தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது. மார்க்ரம் 93, மில்லர் 63, மார்கோ 47, பெலுக்வாயோ 38* ரன் விளாசினர். ஆஸி. தரப்பில் ஸம்பா 3, அபாட் 2, கிரீன், எல்லிஸ், டேவிட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 34.1 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 71, லாபுஷேன் 44, அபாட் 23 ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மார்கோ ஜான்சன் 5, கேஷவ் மகராஜ் 4, பெலுக்வாயோ 1 விக்கெட் கைப்பற்றினர். 122 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்கா 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அந்த அணியின் மார்கோ ஜான்சன் ஆட்ட நாயகன் விருதும், மார்க்ரம் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

The post ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை வென்றது தெ.ஆப்ரிக்கா appeared first on Dinakaran.

Tags : South Africa ,Australia ,Johannesburg ,Dinakaran ,
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...