×

தங்கம் வென்றார் இளவேனில்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். உலக கோப்பையில் இளவேனில் வென்ற 2வது தங்கப் பதக்கம் இது. முன்னதாக, 2019ல் நடந்த உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் அவர் முதல் முறையாக தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ரியோவில் நேற்று நடந்த விறுவிறுப்பான பைனலில் சென்னையை சேர்ந்த இளவேனில் (24 வயது) 252.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். பிரான்ஸ் வீராங்கனை ஒஷேன் முல்லர் (251.9) வெள்ளிப் பதக்கமும், சீனாவின் ஜாங் ஜியாலே வெண்கலப் பதக்கமும் பெற்றனர். சாதனை வீராங்கனை இளவேனிலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

The post தங்கம் வென்றார் இளவேனில்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் appeared first on Dinakaran.

Tags : Ilaven ,Shooting World Cup ,Rio de Janeiro ,Women's 10m Air Rifle World Cup Shooting Championship Series ,Brazil… ,Ilaveen ,World Cup ,Dinakaran ,
× RELATED காலநிலை மாற்றத்தால் அமேசான்...