×

ஐசிசி உலக கோப்பை இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நீக்கம்

லண்டன்: இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உத்தேச வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது இடத்தில் ஹாரி புரூக் சேர்க்கப்பட்டுள்ளார். ஜாஸ் பட்லர் தலைமையில் மொத்தம் 15 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர். இங்கிலாந்து: ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லயம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, மார்க் வுட், கஸ் அட்கின்சன்.

The post ஐசிசி உலக கோப்பை இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Jason Roy ,England ,ICC World Cup ,London ,India ,Dinakaran ,
× RELATED ரசிகர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு;...