திருவனந்தபுரம்: பொதுமக்களுக்கு போலீஸ் சார்பில் வழங்கப்படும் சேவைக்கான கட்டணத்தை உயர்த்த கேரளாவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு: குற்ற வழக்குகள் இல்லை என வழங்கப்படும் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.555லிருந்து ரூ.610ஆக உயர்த்தப்பட்டுள்ளது. போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பேரணி நடத்த ரூ.2000, உட்கோட்ட எல்லையில் பேரணி நடத்த ரூ.4,000, மாவட்ட அளவில் பேரணி நடத்த ரூ.10 ஆயிரம் என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கல்வி நிறுவனங்கள், பொது நூலகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பேரணி நடத்த கட்டணம் கிடையாது. சினிமா படப்பிடிப்பு உள்பட தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் துப்பறியும் நாய்க்கான ஒரு நாள் மற்றும் அதைவிட குறைந்த நேரத்திற்கான கட்டணம் ரூ.7,250 ஆகும். போலீஸ் நிலைய கட்டிடத்திற்கான ஒருநாள் வாடகை ரூ.12,130 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The post கேரளாவில் போலீஸ் சேவை கட்டணம் திடீர் உயர்வு appeared first on Dinakaran.