×

சட்டத் தொழிலின் அடிப்படையான வழக்கறிஞர்களின் நேர்மையை பொறுத்தே தொழில் செழிக்கும்: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

சத்ரபதி சம்பாஜிநகர்: மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் பங்கேற்று பேசியதாவது: வழக்கறிஞர் நேர்மையாக நடந்து கொண்டால் தொழில் தொடர்ந்து செழிக்கும். வழக்கறிஞர்கள் நேர்மை, தர்மத்தை கடைப்பிடிக்காவிட்டால் சட்டத் தொழில் தானாக அழிந்துவிடும். வழக்கறிஞர்களால் உலகம் முழுவதையும் முட்டாளாக்க முடியும். ஆனால் அவர்களது மனசாட்சியை முட்டாளாக்க முடியாது. அது ஒவ்வொரு இரவும் அவர்களைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும்.

நேர்மையே சட்டத் தொழிலின் அடிப்படையாக உள்ளது. வழக்கறிஞர்கள் தொடர்ந்து நேர்மையுடன் வாழ்வோம். நீதிபதிகளை மதிக்கும்போது வழக்கறிஞர்களுக்கு மரியாதையும், வழக்கறிஞர்களை மதிக்கும் போது நீதிபதிகளுக்கு மரியாதையும் கிடைக்கும். இருவரும் நீதி சக்கரத்தின் ஒரு பகுதி என்பதை உணரும் போது தான் இந்த பரஸ்பர மரியாதை ஏற்படுகிறது.சட்ட அமைப்பில் பெண்களுக்கு பொருத்தமான குரல் கொடுப்பதை உறுதி செய்வது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பொறுப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சட்டத் தொழிலின் அடிப்படையான வழக்கறிஞர்களின் நேர்மையை பொறுத்தே தொழில் செழிக்கும்: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Chandrasoot ,Chatrapati Chambajinagar ,Supreme Court ,D.Y. Chandrachute ,Dinakaran ,
× RELATED உடல்நல குறைவால் விருப்ப ஓய்வு பெற்ற...