×

விஸ்வகர்மா திட்டம் மோசமான நடவடிக்கை: முத்தரசன் சாடல்

நாகர்கோவில்: விஸ்வகர்மா திட்டம் மோசமான நடவடிக்கை என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று மாலை நாகர்கோவிலில் அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் பிறந்தநாளில் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கியுள்ளார். 18 தொழில்களை கொண்டுள்ள இந்த விஸ்வகர்மா திட்டத்திற்கு குடும்ப ரீதியில் மேம்படுத்த அறிவிக்காமல், அவர்களது பிள்ளைகள் 18 வயது கடந்த பிறகு மேல் படிப்புக்கு செல்லாமல் அவர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது மோசமான நடவடிக்கை. மோடி அறிவித்துள்ள இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும். மோடியும் பாஜவும் சனாதனத்தை பற்றி அதிகமாக பேசுகிறார்கள். 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாததால் சனாதனத்தை பற்றி பேசுகின்றனர். மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாஜவும் பிரதமர் மோடியும் சனாதனம் பெயரில் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை ஆர்எஸ்எஸ் தான் நடத்தி வருகிறது. நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது குடியரசுத் தலைவர் புறக்கணிப்பட்டார். ஜி 20 மாநாட்டில் தேநீர் விருந்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கப்படவில்லை. ஜனநாயகத்தை சாகடிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post விஸ்வகர்மா திட்டம் மோசமான நடவடிக்கை: முத்தரசன் சாடல் appeared first on Dinakaran.

Tags : Mutharasan Sadal ,Nagargo ,Mutharasan ,Vizwakharma ,Indian Communist ,Secretary of State ,
× RELATED ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?