மன்னவனூர் சுற்றுலாப் பகுதியை பார்வையிட மீண்டும் அனுமதி : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மன்னவனூர் சுற்றுலா பகுதியை 18 நாட்களுக்கு பிறகு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக தீப்பிடித்து எரிந்து வந்ததால் மன்னவனூர் மற்றும் அடர்ந்த காட்டு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் பார்வையிட  கொடைக்கானல் வனத்துறை மூலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த இருநாட்களாக மழை பொழிந்துவந்ததால் மலைப்பகுதிகள்  குளிர்ந்து புல்வெளிகள் புத்துயிர் பெற்றதை தொடர்ந்து நேற்று  கொடைக்கானல் வனத்துறை அனுமதி வழங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மன்னவனூர் பகுதியில் கடை வைத்திருக்கும் சிறுகுறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

Related Stories: