
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சிங்கப்பையிலும் மாணவர்கள் சில பேர் நேற்று இரவு பரமத்தி சாலையில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் உணவருந்தி நண்பர்களுக்கு பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர். இதை சாப்பிட்ட 11 பேருக்கு வாந்தி காய்ச்சல் தொடர்ந்து இருந்துள்ளது. இதனை அடைந்த மருத்துவ பேராசிரியர்கள் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனை அறிந்த கலெக்டர் உமா சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் நேரில் சந்தித்து விவரம் கேட்டறிந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு செய்து கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாணவர்கள் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் சாப்பிட்ட அரசு மருத்துவ கல்லூரி மாணவ மாணவியருக்கு வாந்தி காய்ச்சல் appeared first on Dinakaran.