×

‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய ஐகோர்ட் கிளை தடை

மதுரை: ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் புற்றுநோய் அதிக அளவில் ஏற்படுகிறது. விஷம் என்பதில் ஒரு துளி விஷம் என்று இல்லை, எல்லாமே விஷம் தான் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பே நச்சுப்பொருட்கள் கலந்து சிலைகளை செய்யக்கூடது என உத்தரவு உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த நபர் (பிள்ஸ்டர் ஆஃப் பாரிஸ்) ஒன்றிய சுற்றுசூழல் துறை, மாசுகட்டுபாட்டு வாரியத்தால் தடை செய்யபட்ட மூலப்பொருட்களை கொண்டு செய்யபட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய மாவட்ட நிவாகம் மற்றும் காவல்துறையினர் தடை விதித்தனர்.

இந்த தடை உத்தரவை ரத்து செய்து தன் தயாரித்த சிலைகளை விற்க அனுமதிக்க வேண்டும் என்று நேற்று உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தக்கல் செய்தார். தொடர்ந்து இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையீடு செய்யபட்டது. அதன் அடிப்படையில், நேற்று தனி நீதிபதி இந்த வழக்கை விசாரித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரையில் தாமரபரணி ஆறு கடுமையாக மாசடைந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் மாசுகட்டுபாட்டு வாரியத்தால் தடை செய்யபட்ட மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கபட்ட சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதி கிடையாது. ஆனால் தயாரிக்கபட்ட சிலைகளை விற்பனை செய்துகொள்ளாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு ஒன்றிய சுற்றுசூழல்துறை வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே ஒன்றிய மாசுகட்டுபாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்ற தனிநீதிபதி தவறிவிட்டார் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தரப்பில் இன்று உயர்நீதிமன்ற மதுரைகிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் முறையீடு செய்யபட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள்; தனி நீதிபதி ஒன்றிய சுற்றுசூழல் துறை விதிமுறைகளை கவனிக்க தவறியுள்ளார். ஒன்றிய சுற்றுசூழல் துறை பிள்ஸ்டர் ஆஃப் பாரிஸ் எனப்படும் நச்சுபொருள் கொண்ட தயாரிக்கபட்ட சிலைகளை விற்பனை செய்வதற்கோ அல்லது தயாரிப்பதற்கோ தடை விதிக்கபட்டுள்ளது. குறிப்பாக விநாயகர் சிலைகளை செய்ய கூடிய நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்பு துறைகளில் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். எத்தனை சிலைகள் தயாரிக்கபடுகிறது, அவற்றிற்கான வைப்பு நிதிகளை வைக்கவேண்டும் என்று ஒன்றிய சுற்றுசூழல் துறையின் வழிமுறைகளில் உள்ளது. அதனை மீறிதான் இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது. எனவே தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள் பிள்ஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு தயாரிக்கபட்ட சிலைகளை விற்கவோ, தயாரிக்கவே தடை விதித்து உத்தரவிட்டனர்.

The post ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய ஐகோர்ட் கிளை தடை appeared first on Dinakaran.

Tags : Igourde branch ,Vieger ,Plaster ,Paris' ,Madurai ,High Court ,Madurika ,Blaster of Paris' ,Igourd Branch ,Dinakaran ,
× RELATED 400 விநாயகர் சிலைகள் கரைப்பு