×

சிவகிரி விற்பனைக்கூடத்தில் ரூ.12 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 97 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கருப்பு ரகம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.183.30க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.159.42க்கும், சராசரி விலையாக ரூ.178-99க்கும், சிவப்பு ரகம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.180.99க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.136.89க்கும், சராசரி விலையாக ரூ.175.99க்கு ஏலம் போனது. மொத்தம் 7,562 கிலோ எடையுள்ள எள் ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 841 ரூபாய்க்கு விற்பனையானது.

 

The post சிவகிரி விற்பனைக்கூடத்தில் ரூ.12 லட்சத்துக்கு எள் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Sesame ,Sivagiri market ,Modakurichi ,Sivagiri Regulation Hall ,Dinakaran ,
× RELATED எள்ளு பன்னீர் மஞ்சூரியன்