×

மேய்க்கல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

தொட்டியம்: மேய்க்கல் நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திமுக மருத்துவ அணி சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. தொட்டியம் அருகே மேய்க்கல் நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பாக மருத்துவ உபகரணங்கள் மற்றும் நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏவும், திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு, நோயாளிகள் எடை அளவீட்டு கருவி, நோயாளிகளின் உயரம் பார்க்கும் அளவீடு கருவி, கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவத்திற்கு தையல் போட தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை மேய்க்கல்நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரிடம் வழங்கப்பட்டது. விழாவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி திமுக வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் செய்திருந்தார்.

 

The post மேய்க்கல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Meikalnayakanpatti Primary Health Centre ,Meikkal Nayakkanpatti Government Primary Health Center ,DMK ,Meikalnayakanpatti Primary Health Center ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் நகர திமுக ஆலோசனை கூட்டம்