×

திருத்துறைப்பூண்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் 49 பேர் ஆபரேஷனுக்கு தேர்வு

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சங்கத்தலைவர் கனேசன் தலைமை வகித்தார். செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார். கண்சிகிச்சை முகாமில் 129 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 49 நபர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 49பேரையும் கோவையில் உள்ள சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, மீண்டும் அழைத்து வரப்படுகிறார்கள். இதில் முகாம் சேர்மன் தணிக்காச்சலம், மாவட்ட துணை ஆளுனர் அறிவழகன் மற்றும் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சதாபத்மநாதன் நன்றி கூறினார்.

The post திருத்துறைப்பூண்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் 49 பேர் ஆபரேஷனுக்கு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Tiruthurapoondi ,Thiruvarur District Thiruthurapoondi Rotary Society ,District Vision Loss Prevention Society ,Coimbatore Shankara Eye Hospital ,Thiruthurapoondi ,treatment ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே 500 ஏக்கர்...