×

திமுக மருத்துவர் அணி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்கல்

தஞ்சாவூர்: கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநில மருத்துவர் அணி துணை செயலாளரும், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயருமான அஞ்சுகம் பூபதி தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மருத்துவ உபகரணங்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்களிடம் வழங்கினர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக துணை செயலாளர் மணிமாறன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் வசந்தகுமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் ராஜ்மோகன், துணைத்தலைவர் பேட்டன் ராஜ், துணை அமைப்பாளர்கள் சதீஷ் சுரேஷ், தஞ்சாவூர் தொகுதி அமைப்பாளர் விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

The post திமுக மருத்துவர் அணி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : DMK ,Thanjavur ,Thanjavur central district ,Anna ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை சம்பா பயிர் பாசன தேவை பூர்த்தியாகும்