கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் முற்றிலும் டெங்கு பரவமால் இருக்க மலேரியா காய்ச்சலை தடுக்கும் நோக்கில் டெங்கு நோயை பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஏராளமானோர் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் செயல்அலுவலர் அறிவிப்பின் படி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 8 வது வார்டு 9 வது வார்டு பகுதிகள் மற்றும் புதுக்கோட்டை சாலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதே போல அனைத்து வார்டு பகுதிகளிலும் மலேரியா டெங்கு உள்ளிட்ட கொசுவால் ஏற்படக்கூடிய நோய்களை முற்றிலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
The post கறம்பக்குடி பேரூராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.