×

கலெக்டரிடம் மாதர் சங்கம் மனு அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

விராலிமலை: அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிப்பர் மற்றும் டிராக்டர் வாகனங்களை பறிமுதல் செய்து கனிமவள அதிகாரி நடவடிக்கை எடுத்தார். அன்னவாசல் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆற்றுபடுகைகளில் இருந்து அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு டிராக்டர், லாரி, டிப்பர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கடத்தப்பட்டு அப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை நடைபெற்று வருவதாக புதுக்கோட்டை கனிமவள துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கனிமவள உதவி புவியியலாளர் சங்கர் தலைமையிலான குழுவினர் அன்னவாசல் சுற்றுப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நாங்குபட்டியில் மணல் அள்ளி வந்த பதிவெண் இல்லாத டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதே போல மழவராயன் பட்டியில் மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதிலும் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்த டிராக்டர் மற்றும் டிப்பரை பறிமுதல் செய்த கனிம வள உதவி புவியியலாளர் சங்கர் அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார். இதையடுத்து இதில் தொடர்புடைய பழனிச்சாமி மற்றும் சரவணன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கலெக்டரிடம் மாதர் சங்கம் மனு அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mathar Sangam Manu Annavasal ,Viralimalai ,Minerals ,Annavasal ,
× RELATED விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி