×

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 4 புதிய சத்துணவு மையங்களையும், 69 பழுது நீக்கப்பட்ட சத்துணவு கட்டிடங்களையும் முதலமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு ஒப்படைக்க வேண்டும். மேலும் இத்திட்டம் சிறப்பாக நடைபெற சமையல் செய்யும் குழு உறுப்பினர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பள்ளியில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு தேவையான உதவிகளை வேளாண்மை தோட்டக்கலை மூலம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூட்டத்தில் பேசப்பட்டன. இந்நிகழ்வில் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார். முடிவில், உதவியாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

The post ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Alatur panchayat union ,Badalur ,Panchayat Union ,Aladhur Taluk ,Perambalur District ,Alatur Panchayat Union Office ,Dinakaran ,
× RELATED திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய...