×

திருமருகல் அருகே கங்களாஞ்சேரியில் மக்கள் நேர்காணல் முகாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திருமருகல் அருகே கங்களாஞ்சேரி ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில், தனித்துணை ஆட்சியர் கார்த்தி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் புனிதா வரவேற்றார். தாசில்தார் ரமேஷ், தனிதுணை தாசில்தார் கவிதாஸ், வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 776 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தனித்துணை ஆட்சியர் கார்த்தி வழங்கினார். முகாமில், மண்டல துணை தாசில்தார் ஜெயசெல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன், வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வி.ஏ.ஓ., முத்துக்குமார் நன்றி கூறினார்.

The post திருமருகல் அருகே கங்களாஞ்சேரியில் மக்கள் நேர்காணல் முகாம் appeared first on Dinakaran.

Tags : Kangalanchery ,Tirumarukal ,Nagapattinam ,Gangalancheri ,Tirumarukal, Nagai district ,Thirumarukal ,
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்