×

இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு

லண்டன்: இங்கிலாந்தில் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஈடுகட்ட, வெளிநாட்டினர் விண்ணப்பிக்கும் விசாவிற்கு அவர்கள் தேசிய சுகாதார சேவையை பயன்படுத்துவதற்கான வரியை உயர்த்தப் போவதாக அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஜூலையில் அறிவித்திருந்தார். அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விசா கட்டண உயர்வு அறிவிப்பை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

இதன்படி, தொழில் நிமித்தமாக அல்லது குடும்பத்தினரை பார்க்க இங்கிலாந்து செல்வதற்கான 6 மாதங்களுக்கு குறைவான விசிட் விசாவிற்கு ரூ.1545 கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி இந்த விசா பெற ரூ.11,845 கட்டணம் செலுத்த வேண்டும். இதே போல மாணவர்களுக்கான விசா கட்டணம் ரூ.37,390ல் இருந்து ரூ.50,450 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அக். 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

The post இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : UK ,London ,National Health Service ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...