×

பக்கிங்காம் அரண்மனைக்குள் சுவர் ஏறி குதித்த வாலிபர் கைது

லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள ராயல் மியூஸ் என்பது அரச குடும்பத்தினர் பயன்படுத்தும் வண்டிகள், வாகனங்கள் உள்ளிட்டவை இருக்கும் இடமாகும். அரசு குடும்ப திருமணங்கள், முடிசூட்டு விழாக்களில் பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள் மற்றும் குதிரை லாயங்கள் இங்கு இருக்கும். இந்நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி 1.25மணிக்கு வாலிபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து ராயல் மியூஸ் பகுதிக்கு நுழைந்துள்ளார். இதனை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் உடனடியாக கண்டறிந்த நிலையில் சிறிது நேர தேடுதலுக்கு பின் ராயல் மியூஸ் வெளியே அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.

The post பக்கிங்காம் அரண்மனைக்குள் சுவர் ஏறி குதித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Buckingham Palace ,London ,Royal ,Buckingham Palace, London, England ,
× RELATED சென்னை வந்தபோது நடுவானில் கோளாறு...