×

ஒட்டன்சத்திரத்தில் நகர சபா கூட்டம்

ஒட்டன்சத்திரம், செப். 17: ஒட்டன்சத்திரத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நகர வார்டு சபா கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் திருமலைசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியின் தேவைகள் குறித்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர். இதில் ஆணையாளர் மீனா, நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர் சாந்தி, வார்டு செயலாளர் வீனஸ் கருப்பணன், துப்புரவு மேற்பார்வையாளர் காமராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம், ஆசிரியர் (ஓய்வு) ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் நகர சபா கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Otanchatra ,Otanchatram ,Anna ,City Council ,Thirumalaisamy ,
× RELATED வனப்பகுதியில் கொசு தொல்லை அதிகரிப்பு...