
- ராமசாமி சோளடியார்
- தலைமைக் குடியரசுத் தலைவர் மு.
- ஸ்டாலின்
- சென்னை
- ச. எஸ்.
- ராமசாமி
- ஸ்டாலின் தலைமை அதிபர் மு.
- முதல்வர் கிமு ஜெ ஸ்டாலின்
சென்னை: இந்திய விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: விடுதலைப் போராட்ட வீரரும், பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாளில் தமிழ்நாட்டுக்காகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காவும் அவர் ஆற்றிய பணிகளை நன்றியுடன் போற்றி, அவரது சமூகநீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம்.
ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்): இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார். உழவர் உழைப்பாளர் கட்சியை நிறுவிய அவர், அக்கட்சியின் மூலம் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்தவர். அவரது பிறந்த நாளில் சமூகநீதிக்கான அவரது பங்களிப்பை நாம் போற்றுவோம்.
The post ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.