×

அரசு பள்ளியில் தூய்மை பணி பிடிஓ பங்கேற்பு

திருமங்கலம், செப். 17: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் டி.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடும் பணி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்க ர்கைலாசம் தலைமையில் நேற்று நடந்தது. இதன்படி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டி.புதுப்பட்டி ஊராட்சி பள்ளியில் நேற்று சுத்தம் செய்யும் பணிகளும் மரக்கன்றுகள் நடும் பணிகளும் நடைபெற்றன. இதில் திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம் தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் முனியம்மாள் பாண்டி, வட்டார மேலாளர் இளவரசி, ஊராட்சி செயலாளர் தாமரை மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளியை சுத்தம் செய்து புங்கம், நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து தூய்மை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

The post அரசு பள்ளியில் தூய்மை பணி பிடிஓ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : PTO ,Thirumangalam ,Tirumangalam Panchayat Union D. Pudhupatti Panchayat Union Primary School ,
× RELATED துணை பிடிஓ.,க்களுக்கு பிடிஓவாக பதவி உயர்வு