×

மாமல்லபுரத்தில் பசுமை பாரம்பரிய திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

மாமல்லபுரம், செப். 17: மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே பசுமை பாரம்பரிய திட்டத்தை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ரெனால்ட் நிஷான் டெக்னாஜி நிறுவனம், ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 30 கிலோ வாட் சூரிய சக்தி கன்ட்ரோல் ரூம், வாகனங்கள் வந்தால் உள்ளிழுக்கக்கூடிய பொல்லார்டு பேரி கார்டுகள், 25 கருங்கல் இருக்கைகள், வழிகாட்டி பெயர் பலகைகள், செல்பி பாயிண்ட் போன்றவை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் நேற்று மாலை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் மூலம் தொடங்கி வைக்கப்பட்டு, இந்திய தொல்லியல் துறை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ரெனால்ட் நிஷான் டெக்னாலஜி பொறியியல் பிரிவு மூத்த துணைத் தலைவர் ஹிரோடெக் ஹராடா, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிர்வாக அறங்காவலர் கல்பனா சங்கர், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post மாமல்லபுரத்தில் பசுமை பாரம்பரிய திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Chengalpattu ,Collector ,Rahulnath ,Mamallapuram Beach Temple.… ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: 3-வது...