×

மாநில சதுரங்க போட்டிக்கு கோவில்பட்டி ஜோசப் பள்ளி மாணவர் தேர்வு

கோவில்பட்டி, செப். 17: தூத்துக்குடி மாவட்ட அரசு கல்வித்துறை சதுரங்க போட்டி, குறுவள சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களை மாநில சதுரங்க போட்டிக்கு தேர்வு செய்ய தூத்துக்குடி புனித பிரான்ஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வித்துறை மூலம் சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. இதில் 3வது இடத்தை வென்ற கோவில்பட்டி புனித ஜோசப் பள்ளி மாணவர் பிரியதர்ஷன், இதன்மூலம் மாநில சதுரங்க போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்கும் தகுதிபெற்றார். சாதனை படைத்த மாணவரை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், கோவில்பட்டி புனித ஜோசப் பள்ளி தாளாளர், பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர், கோவில்பட்டி சதுரங்க கழகம் சங்கர் பாராட்டினர்.

The post மாநில சதுரங்க போட்டிக்கு கோவில்பட்டி ஜோசப் பள்ளி மாணவர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kovilpatti Joseph School ,Kovilpatti ,Thoothukudi District Government Education Department Chess Competition ,Kuruvala Chess Competition ,Dinakaran ,
× RELATED மானாவாரி நிலங்களில் விளையும் பயிர்களுக்கு ஏற்ற விதைகளை வழங்க வேண்டும்