×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

உடன்குடி,செப்.17: திருச்செந்தூர் கோயிலில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நடந்தது. மேலும் தீ தணிக்கை குறித்த ஆய்வும் நடந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் ராஜூ, திருச்செந்தூர் நிலைய அலுவலர் ராஜமூர்த்தி ஆகியோர் தீ தணிக்கை ஆய்வு மேற்கொண்டனர். தீ இடர்பாடு அபாயம் உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து விளக்க உரை மற்றும் ஒத்திகை பயிற்சிகளும் செய்து காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் அலுவலக கண்காணிப்பாளர் செய்திருந்தனர்.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Murugan Temple ,Ebengudi ,Tiruchendur temple ,
× RELATED திருச்செந்தூர் கோயில் கடற்கரையில்...