
- வருஷபிஷேகா
- மந்தித்தோப்பு துளசிங்க நகர் பூமாதேவி கோவில்
- சித்தர் பீடம்
- கோலாகலம் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ
- கோவில்பட்டி
- மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி கோவில்
- சித்தர் பீட வருஷா பிஷேகம்
- கொலக்களம் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ
- வருஷாபிஷேகம்
- மந்தித்தோப்பு துளசிங்க நகர் பூமாதேவி கோவில்
கோவில்பட்டி, செப். 17: கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீட வருஷாபிஷேக விழாவில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்று அன்னதானம் வழங்கினார். கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் 30ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, கணபதி பூஜை, சங்கல்பம் கும்ப பூஜை, கணபதி ஹோமம், அம்பாள் மூலமந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சிகளில் யூனியன் துணைத்தலைவர் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராமர், பால்ராஜ், சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மந்திரமுர்த்தி, திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், லட்சுமி, பானு மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post மந்தித்தோப்பு துளசிங்க நகர் பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் வருஷாபிஷேக விழா கோலாகலம் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.