×

திருப்பதியில் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்-எஸ்பி பேச்சு

திருப்பதி : திருப்பதியில் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எஸ்பி வெங்கட அப்பல நாயுடு பேசினார். திருப்பதி காவல்துறை சார்பில் ஆஜாத் அம்ருத் வார விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பதி பஸ் நிலைய வளாகத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை சார்பில் சிறப்பு கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியை எஸ்பி வெங்கட அப்பல நாயுடு,  திருப்பதி 4வது மாவட்ட கூடுதல் நீதிபதி சத்தியானந்த் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.  தொடர்ந்து எஸ்பி வெங்கட அப்பல நாயுடு பேசியதாவது: பொதுமக்கள் ஒத்துழைப்பால் அதிகளவில் குற்றங்கள் தடுக்கப்படுகிறது. தங்கள் பகுதியில் நடைபெறும் சமூக விரோத செயல்களையும், வெளியாட்கள் நடமாட்டத்தையும் பொதுமக்கள் காவல்துறைக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு பொதுமக்கள் தரும் தகவல் மூலமாக குற்றம் நடைபெறாமல் உடனடியாக தடுக்கலாம். குற்றங்களை தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். திருப்பதி காவல் துறையில் பெண்கள் போலீசார், சைபர் குற்றம், பூட்டிய வீடுகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று(நேற்று) சிறப்பு கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு, போலீசாரிடம் தங்களது சந்தேகங்களை, விவரங்களை கேட்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

The post திருப்பதியில் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்-எஸ்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,-SP ,Venkata Appala Naidu ,Dinakaran ,
× RELATED காவல்துறை தொழில்நுட்ப வல்லுனர்களுடன்...