×

கணவர் விபத்தில் பலியான சோகத்தில் மனைவி தற்கொலை

நெல்லை, செப். 17: முக்கூடல் பாண்டியாபுரம் தெருவை சேர்ந்தவர் தங்கப்பா. இவரது சொந்த ஊர், விக்கிரமசிங்கபுரம் காமராஜர் தெருவாகும். முக்கூடலில் வசித்து வந்தார். இவரது மகன் இசக்கிமுத்து(38), அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து அந்த வருமானம் மூலம் குடும்பம் நடத்தி வந்தார். கடந்த வாரம் திங்கட்கிழமை பணி முடித்து இரவில் முக்கூடலில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் அவர் இறந்தார்.இதைத்தொடர்ந்து கணவரின் பிரிவை தாங்காமல் மனைவி வசந்தி மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கணவர் விபத்தில் பலியான சோகத்தில் மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nellie ,Thangappa ,Mukoodal Pandiyapuram Street ,Kamarajar Street, Wickramasinghapuram ,Mukoodal ,
× RELATED நெல்லை காங். தலைவர் மரணம் வழக்கு...