×

5800 ஆடுகள், 270 டன் காய்கறிகள் ₹3 கோடிக்கு விற்பனை

இடைப்பாடி, செப்.17: கொங்கணாபுரத்தில் நேற்று நடந்த சனி சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தைக்கு 5800 ஆடுகள், 4000 பந்தய சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு, செம்மறி கிடாய் ₹5000 முதல் முதல் ₹6800 வரையும், 20 கிலோ எடையுள்ள ஆடுகள் ₹10 ஆயிரம் முதல் ₹13 ஆயிரம் வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ₹2800 முதல் ₹3000 வரையும், 30 கிலோ எடையுள்ள ஆடுகள் ₹15000 முதல் ₹17,800 வரை விலை போனது. பந்தய சேவல், காகம் கீரி, செங்கருப்பு, மயிலே, சுருளி ₹1000 முதல் ₹3000 வரை விலைபோனது. பந்தய சேவல்களை பெங்களூர், கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகள் வாங்கி சென்றனர். நாட்டுக்கோழி கிலோ ₹400 முதல் ₹450 வரையும், கலப்பின கோழி கிலோ ₹200 முதல் ₹250 வரை விலை போனது. 270 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தது. தக்காளி கிலோ ₹15 முதல் ₹40 வரையும், பெரிய வெங்காயம் ₹20 முதல் ₹40 வரையும், சின்ன வெங்காயம் ₹40 முதல் ₹50 வரை விலை போனது. புரட்டாசி மாதத்தையொட்டி ஆடுகள் வரத்து குறைவாக இருந்ததாகவும், நேற்றைய சந்தையில் ₹3 கோடி வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post 5800 ஆடுகள், 270 டன் காய்கறிகள் ₹3 கோடிக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Eadhapadi ,Andhra Pradesh ,Karnataka ,Konkanapuram ,
× RELATED ஆம்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: 2 மணி நேரம் பயணிகள் தவிப்பு