×

₹16.33 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு, செப்.17: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. ஜேடர்பாளையம் சோழசிராமணி, இறையமங்கலம், சங்ககிரி, இடைப்பாடி, கொளத்தூர், ஓமலூர், அரூர், பொம்மிடி, ஊத்தங்கரை, கொடுமுடி, பாசூர், அந்தியூர், துறையூர், தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 300 மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ₹10,186 முதல் ₹14,610 வரையிலும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ₹9,626 முதல் ₹12,802 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 300 மூட்டை மஞ்சள் ₹16.33 லட்சத்திற்கு விற்பனையானது.

The post ₹16.33 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Tiruchengode Agricultural Producers Cooperative Marketing Association ,Jaderpalayam Cholasiramani ,
× RELATED மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்